காதலனின் கோரிக்கை
மூட்டை மூட்டையாய், எக்கச்சக்க காதல் விதைகளோடு, கொள்முதல் செய்வாய் என காத்திருக்கிறேன் ! நெற்களில் ஈரப்பதம் அதிகம் உள்ளதென்று, கொள்முதல் நிலையங்களிலேயே நெற்களை முளைக்க விடும் , "ஒன்றிய அரசு"போல் இல்லாமல்! விதைகளில் காதலின் அளவு அதிகம் இல்லை என்றாலும், இந்த ஏழைக் காதலனின் நிலைமையைக் கருதி , குறைந்தபட்ச ஆதார விலையாக சிறிய அளவு காதலையாவது திருப்பி தருமாறு கோரிக்கை வைக்கிறேன்!
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
