இது முதல்
மதுரை பொன்னு கேட்டாள், "மருந்து சாப்பிட்டாயா?" நேற்று நடந்ததை இன்று சொல்கிறேன்... கால்கள் முத்தமிட்டது நடக்கும் போது; உதடுகள் முத்தமிட்டது மயங்கும் போது; (தெளிவதற்கும் கூட) இங்கு "பணம்" தேவை... கண் இமையில் சாரல், கன்னத்தில் மழை, கருவிழியில் வெள்ளம்— கைகள் தான் அனைத்தது. இரண்டு நாளாய் மருத்துவமனைக்கு, என்னோடு காதல்— மருந்துகள் தான் பரிசு. கொடுத்தது காய்ச்சல், எடுத்தது ரத்தம்... கொஞ்சம் தயக்கம், விழுந்தேன் மயக்கம், ஊர் சுற்றியவனுக்கு தலை சுற்றியது, மீண்டும் சுற்றியது... மில்லி அளவு ஊசிக்கு வெள்ளி அளவு பில்— எனக்கு அதிகம் தானே! அரை பாட்டில் குளுக்கோஸ் ஏறியது...அரைமணி நேரம், அங்கும் யாரும் இல்லை, நிழலும் நின்றது, நிற்க முடிந்த நேரம்...
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
