"சிலையாய் நின்றேன்"
அவமானமும் அழுகையும் ஏன் இப்போது பழக்கமாகிவிட்டன? சமீப நாட்களாக மனம் மிகுந்த சுமையாய் உருகி வருகிறது. கடவுளுக்கு மிகவும் அருகில் சென்றுவிட்டேனோ என்னவோ… அவனைப் போலவே பேசாமல், சிலையாய் நின்றேன். புன்முறுவலும் ஓர் கதையாகி, பார்வை எதையும் எதிர்பாராதவளாய்… ஓர் சிறிய வார்த்தைக்கு ஏங்கிய மனம், வெறும் மௌனத்தையே நேசிக்கத் துடிக்கிறது.எனக்காய் துடிக்கும் இதயம் உண்டா எனத் தேடும் ஒரு இருளில், நான் தனியே..
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
