என்னவனின் அவள்...
பாகம் -1 முதல் சந்திப்பு... 🥰 மாப்பிளை வர போறாங்க...!!!!! வா வந்து பேசாம நில்லு என்று தாயின் அதட்டலில் அந்த முருகன் சன்னதியில்...!!!!! என்னடா... யாரோ ஒருவர் வருவதற்காக தன் இயல்பை மாற்றி கொள்ள வேண்டுமா..? என்று சிறிது கோபத்துடன்...!!! கட்டாயப்படுத்தி அம்மா கட்டிவிட்ட சேலை நுனியை பிடித்துக் கொண்டு நின்றியிருக்க....!!! வரப்போகும் மாயவனோ... என்னை காக்க வைத்து என் பொறுமையை சோதிக்க...!!!தன் வாய் சும்மா இராது என் தம்பியுடன் உரையாட ஆரம்பித்த சிறிது நேரத்தில் வந்து சேர்ந்த மாயவனை காண இயலாதப்படி சூழ்ந்தது என் உறவினர் கூட்டம்...!!!எப்படியேனும் பார்த்தே தீர வேண்டும் அதும் அந்த மாயவன் என்னை பார்க்காத போது... என்று மறைந்து நின்று பார்த்த இருமுறையும் சிறைப்பட்டேன் அவன் விழிகளில்....!!!சிறுபுன்னகையுடன் திரும்ப முயலும் போது தான் புரிந்தது அவனும் அதே வேளையில் தான் இருந்தான் என்று.... 😛
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
