அன்பு
மலைபோல் அன்பை என்னிடம் தேடாதீர்கள்; அன்பைக் குவிப்பதைவிட, பரப்புவதையே விரும்புபவன் நான். மெல்லிய திரையாக இருந்தாலும் காற்றைப் போல் பாகுபாடின்றி உலகை அதில் மூட முயற்சிக்கிறேன். அது சில நேரங்களில் புயலாகக்கூட வீசலாம்; சில இடங்களில் ‘ஆக்சிஜன் டேங்க்’ கூட தேவைப்படலாம். எனக்குக் குறைவில்லாமல் கிடக்கும் அன்பு மலைகளை முத்தமிட்டு கேட்கிறேன் படருங்கள்.
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
