மறுமலர்ச்சி
வெயிற்காலம் முடிந்து பணிக்காலம் வந்தவிட்டது! இருந்தும் கடந்தகால சோகங்கள் உள்ளே கொதித்து கொண்டு தான் இருக்கிறது ! பாம்பின் சட்டையைப்போல் கழற்றியெரியதான் நினைக்கிறேன் முடியவில்லை... மாறாக விரும்பியவரிடம் விஷத்தை தான் கக்குகிறேன் கண்ணீரால் மனக்கழிவை வெளியேற்றவே நினைக்கிறேன் முடியவில்லை... ஏனெனில் மழைநின்றுவிடுவதுண்டு மழைக்காலம் இல்லை கண்ணீரும் அப்படித்தான்!! புதைக்கப்பட்ட பிணங்கள் புற்களாக வளர்ந்து புதிய உயிராக்கப்பட்தை கண்டேன்! ஒன்றன் பின் ஒன்றாக செல்லும் எறும்புகூட்டம் கழைக்கப்பட்ட போதிலும் குழம்பாமல் புதிய பாதையில் செல்வதை கண்டேன்! பாறையை பிளந்து பூக்கும் பூவையும் கண்டேன்! எனவே மறுமலர்ச்சி என் வாழ்வில் விதிவிலக்கில்லை ஏனெனில் நானும் இயற்கையின் பிள்ளை! ஆகையால் துக்கத்தின் மறுமலர்ச்சிக்கு நான் தயராக இல்லாமலுமில்லை. ஏனெனில் விதி வாழ்க்கையின் பிள்ளை !!!
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
