பெருந்தலைவர் காமராசர்
குறள் வெண்பாவில் குறள் வெண்பாவில் காமராசர் 1. உலகத்தில் காமராசர் ஒப்பிலா மாந்தர்! பலருமே போற்றிடப் பார்! 2. இல்லார்க்குக் காமராசர் இன்முகத்தால் செய்தபணி கல்விப் பணியெனக் காண். 3. திறமை உழைப்பு தீஞ்சுவைப் பேச்சால் அறவாழ்வில் காமராசர் ஆம்! 4. விருதுநகர் தந்ததே வேறுபா டில்லா அருந்தலைவர் காமராசர் ஆம்! 5. ஏழுலகம் காணா எளிமையில் காமராசர் வாழுகிறார் இம்மண்ணில் வாழ்த்து..! 6. பரிதியொப்ப பாரியொப்ப பால்நில வொப்ப திரியா ஒழுக்கத்தின் திக்கு! 7. விடுதலையில் காமராசர் வித்தாகி னாரே நடுநிலை யாளரை நாடு! 8. பிஞ்சில் பழுத்த பிறந்தநாட்டுப் பற்றிலே அஞ்சாத காமராசர் ஆம்! 9. நேர்மை எளிமை நிறைநெஞ்சில் காமராசர் கூர்மை அறிவாலே குன்று..! 10. படிப்படியாய்க் காமராசர் பாங்காய் உயர்ந்தார் அடியும் பிறழாமல் ஆண்டு! ..புத்த கவி..
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
