காணாதே கண்மணியே
கண்ணாய் கருதியதே கண்டபிழை- கண்மணியே! கனாவாய் களையக் காண்பதெல்லாம், கிளற கண்ணெதிரே நீ காண- கண்ணில் சிறு ஈரமில்லை, கடக்க துடிக்கும் நிகழ்வுகளை மீட்டெக்க துடிக்குமாய் உன் வருகை- உதரிய திடத்துடன் மேலெழ யிருந்த பறவையின் இறகறுபட்டதே இங்கென் நிலைமையாம்! கண்மணிக்கு கண்டணமாயினி காண வியழும் கணம் நேருமெனிலும் காணாது தவிர்திருவாய் கண்ணே!! கண்டவரை- கண்ட வலிகளில், காணாது கடந்ததும் சேர்ந்து கொள்ளட்டும், கண்ட பின் கடந்தகால கணங்களை காணச் செய்வதைக் காட்டிலும், காணாது கடப்பது மேல்! களைந்த கனா தான் களையட்டுமே மீண்டும்! கண்டுகொள்ளத் தான் யாருண்டு, காட்டு மழையில் கரைந்தோடும் களிமண்ணாகட்டுமென் கவலையும்!! காதலும்!!! -ருத்ரா 🖤
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
