இந்திய அரசியலமைப்பு
part 1 * நாட்டின் நிர்வாகத்தை வழிநடத்தும் விதிகளின் தொகுப்பு. அரசியலமைப்பு என்பது விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளின் சட்ட வடிவமைப்பாகும். * நமது அரசியலமைப்புச் சட்டம் 1950 ஜனவரி 26 அன்று நடைமுறைக்கு வந்தது. * இந்திய அரசியலமைப்பின் தந்தை டாக்டர்.BR.அம்பேத்கர். * 1930 ஜனவரி 26 முழு சுதந்திர நாளாகக் கொண்டாடப்பட்டது. * இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்க இந்திய அரசமைப்பு நிர்ணய மன்றம் 1946 யில் உருவாக்கப்பட்டது. * இந்த மன்றம் அமைச்சரவை தூதுக்குழு திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது. * இதில் 292 மாகாணப்பிரதிநிதிகள், 93 சுதேச அரசுகளின் நியமன உறுப்பினர்கள், 3 மாகாண முதன்மை ஆணையர், பலூச்சிஸ்தானின் சார்பில் ஒருவர் என மொத்தம் 389 உறுப்பினர்கள் இருந்தனர். * இதன் முதல் கூட்டம் 1946 நவம்பர் 9 யில் நடைபெற்றது.
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
