கணிதம்
* 0 என்ற எண் ஒரு இரட்டை எண்.. 1 என்ற எண் ஒற்றை எண். அதன் தொடரி 2 ஓர் இரட்டை எண். * இயல் எண்களின் முதல் எண் 1. முழு எண்களின் முதல் எண் 0. * ஓர் எண்ணின் ஒவ்வொரு மடங்கும் அந்த எண்ணை விட அதிகமாகவோ அல்லது சமமாகவோ இருக்கலாம். * ஓர் எண்ணின் மடங்குகள் முடிவற்றவை. * 1 ஆனது பகு எண்ணும் அல்ல, பகா எண்ணும் அல்ல. * 1 ஐ விட அதிகமான ஓர் இயல் எண்ணானது 1 மற்றும் அதே எண்ணை மட்டுமே காரணிகளாக பெற்றிருப்பின், அந்த எண் பகா எண் எனப்படும். 2(1×2) * ஓர் இயல் எண்ணானது இரண்டிற்கும் மேற்பட்ட காரணிகளை பெற்றிருப்பின் அந்த எண் பகு எண் ஆகும். 70(1×2×5×7) *ஓர் எண்ணின் அந்த எண்ணை தவிர்த்து மற்ற காரணிகளின் கூடுதலானது அதே எண்ணைத் தரும் எனில் அது செவ்விய எண் ஆகும் 6 ன் காரணிகள் = 1,2,3,6 6 ஐ தவிர்த்து 1+2+3=6
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
