அன்பு
அன்பு... அன்பு ஒரு கூடு அதைத் தேடு அகப்படு சுதந்திரம் தொலை சிறுசிறு சண்டை செய் இழுத்துப் பிடி அறுந்துபோகும் சுயமரியாதை இழ காலில் விழு கனவில் அழு உறக்கம் கெடு நிம்மதி இழ தற்கொலை செய் மீண்டும் பிற அன்பு தேடாத பொருளாய் உயிரற்ற ஜடமாய் கவனிக்கப் படுவாய் ரசிக்கப் படுவாய் செதுக்கப் படுவாய் கூடும் ஆவாய் அன்பு ஒரு கூடு அதனால் உனக்கு அனைத்தும் கேடு.... த. இதயக்குமார்
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
