தனிமை: ஒரு தீபத்தின் மௌனம் (So
தேடல்கள் ஓய்ந்த திசை தெரியா நிலவு நான், ஆறுதல் சொல்ல யாருமற்ற அமைதித் தீவு! பழகிய முகங்கள் மெல்லப் பனிபோல் மறைய, பயணித்துப் பார்த்தேன் என் உள்மனக் குகையில். புறத்தின் சத்தங்கள் செவிகளில் அடங்க, அகத்தின் ராகம் மெல்லவே கேட்குது... துணையைத் தேடிய கால்கள் களைக்கையில், சுயத்தை ரசிக்கும் கலை மட்டும் இனிக்குது! வாடிய மலரல்ல நான் - இனி உதிர்ந்து மண்ணோடு உரமாகும் விதை! தனிமை என்பது முடிவல்ல - அது எனது காவியத்தின் முதல் வரி. ~ திலக் 👶
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
